சாய்ந்தமருதில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வும் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும்

இலங்கை சோஷலிச குடியரசின்  74ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் சிரமதானமும் மர நடுகை நிகழ்வும் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் இன்று (04) பள்ளிவாசல் வளாகத்தில்  இடம்பெற்றது.
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமவிருந்தினராக சாய்ந்தமருது பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் கலந்து கொண்டார்.
மேலும் மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது 07 மற்றும் சாய்ந்தமருது 05 ஆகிய பிரிவின் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக பள்ளிவாசல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்