தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டம்!
இலங்கையின் 74 வது சுதந்திரதின கொண்டாட்டம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று(4) காலை 8.30 மணியளவில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பமானது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் தலைமையின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது.
இதன்போது பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிதியாளர், பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் குழுவினரால் சுதந்திரதினத்திற்கான மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது.
கருத்துக்களேதுமில்லை