முஸ்லீம் அரசியல்வாதிகள் எங்களுடன் இணைந்து பயணிப்பதற்குத் தயாரில்லை என்ற விடயத்தை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்)

(சுமன்)

முஸ்லீம் அரசியல்வாதிகள் எங்களுடன் இணைந்து பயணிப்பதற்குத் தயாரில்லை என்ற விடயத்தைத் தான் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தங்களின் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த அடிப்படையை வைத்துக் கொண்டு நாங்கள் எங்கள் மக்களைப் பாதுகாக்கக் கூடிய அடிப்படை நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையைப் பொருத்தமட்டில் வடக்கு கிழக்கிலே தமிழர்கள் அதிகம் வாழுகின்றனர். மாகாணசபை அதிகாரங்கள் உருவாக்கப்படுகின்ற போது வடகிழக்கு இணைந்ததாகவே இருந்தது. அதனை அரசாங்கம் திட்டமிட்டு பிரித்திருக்;கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொருத்த மட்டில் நாங்கள் அடிப்படைக் கொள்கையில் இருந்து மாற முடியாது. இணைந்த வடகிழக்கு, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்கின்ற விடயங்கள் நீண்டகாலமாகக் கடைப்படித்து வருகின்ற கொள்கையாகும். இந்தக் கொள்iகைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு வருகின் ஆவணங்களில்; எங்கள் தலைவர்கள் ஒப்பமிடுபவர்கள் அல்ல.

அந்த அடிப்படையிலே தான் இந்தியப் பிரதமருக்கான கடிதம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வடகிழக்கு இணைப்பு என்ற விடயத்திலும், சமஷ்டி என்ற விடயத்தில் ஏனைய சில கட்சிகளும் வெளியேறிய விடயமும் யாவரும் அறிந்தவையே.

இந்த நிலைமையில் இன்று தமிழ் பேசும் இனம் என்ற ரீதியில் பலர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். தழிழ் Nசும் இனம் என்று சொல்லப்படுகின்ற போது அதில் தமிழர்கள் மாத்திரமல்லாமல் முஸ்லீம்களும் உள்ளடக்கப்படுகின்றர்கள். இந்த விடயத்தில் எம்மவர்களுக்கும் கூட புரிதல் வேண்டும்.

முஸ்லீம் அரசியல்வாதிகள் எங்களுடன் இணைந்து பயணிப்பதற்குத் தயாரில்லை என்ற விடயத்தைத் தான் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தங்களின் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த அடிப்படையை வைத்துக் கொண்டு நாங்கள் எங்கள் மக்களைப் பாதுகாக்கக் கூடிய அடிப்படை நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் நாங்கள் தனித்துவமான எமது இனத்தின் விடுதலைக்காக, இருப்புக்காகச் செயற்பட வேண்டும்.

நம்மிடம் ஒற்றுமை என்று சொல்லிவிட்டு சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் அரச தரப்புக்குத் தாவி தாங்கள் சகல பலாபலன்களையும் அனுபவித்து வருகின்ற விடயங்கள் மாத்திரமல்ல அவர்கள் சந்தர்ப்பத்திற்கும், தங்கள் சமூகத்திற்கு ஏற்றால் போல் தொழில் வாய்ப்புகளையும், அபிவிருத்திகளையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

தற்போதும் கூட அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகள் பாரபட்சமான முறையிலே கையாளப்படுகின்றது. அசாங்கம் சொல்லுகின்றது தாங்கள் கொண்டுவருகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவாக இருந்து செயற்பட வேண்டும் என்று. நாங்கள் எந்த அபிவிருத்திக்கும் தடையானவர்கள் அல்ல. ஆனால், அரசாங்கம் ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டங்களையும் பாரபட்சமாகத் தமிழ் பிரதேசங்களைப் புறக்கணித்துவிட்டு முன்னெடுக்;கின்றது.

குறிப்பாக ஒருலெட்சம் வேலைவாய்ப்பில் கூட கிழக்கில்; தமிழர்கள் கூடுதலாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதிலும் அம்பாறை மாவட்டத்தில் அதிகமானவர்கள் புறக்கணிக்;க்ப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று ஒருலெட்சம் கிலொமீட்டர் வீதி அபிவிருத்தியிலும் கூட தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்;கின்றன. இந்த அடிப்படையிலேதான் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. இது உண்;மையிலே இந்த நாட்டில் ஒரு சிறந்த அரசியல் சூழலை ஏற்படுத்தக் கூடிய நிலைமை இல்லை என்பதைத் தான் காட்டி நிற்கின்றது.

அது மாத்திரமல்லாமல் தற்போது கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற இந்த சூழலில் அரசாங்கம் விடாப்பிடியான கொள்கையோடு செயற்படுவது இந்த மக்களை பட்டினிச் சாவை நோக்கிக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது. அரசாங்கததின் இந்தக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும். ஏழை மக்களின் நாளாந்த விடயங்களை அறிந்த கொள்ள முடியாத தலைவர்களாக இந்த நாட்டின் தலைவர்கள் இருப்பதுதான் மிகவும் வேதனையான ஒரு விடயம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.