49 வருடமாக உலகத்தரம் பெற்ற RE/MAX இன் அங்கீகார வணிகமான RE/MAX NORTH REALTY நிறுவன பூ விழா (4ஆம் ஆண்டு விழா) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மக்களின் மனதில் இடம்பதித்த 49 வருடமாக உலகத்தரம் பெற்ற RE/MAX இன் அங்கீகார வணிகமான RE/MAX NORTH REALTY நிறுவனமானது 4 வருடகாலமாக கனடாவாழ் தமிழரும் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வர்த்தகருமாகிய திரு.லதன் வரதராஜா அவர்களால் வலுவாக நிர்வாகிக்கப்பட்டுவருகிறது.

வாடிக்கையாளர் சேவையை மனத்திருப்தியாக வழங்கி வரும் அந்நிறுவனத்தினுடைய பூ விழா (4ஆம் ஆண்டு விழா) வெகு விமர்சையாக 22.01.2022 யாழ்ப்பாணம், Northgate by Jetwing இல் கொண்டாடப்பட்டது. அவ் விழாவை வண்ணமிக்கதாக்கும் பொருட்டு பல முக்கிய விருந்தினர்கள் வருகைதந்திருந்தனர்.

அந்தவகையில், சபரீச அய்யப்பன் உபாசகர் திரு.திருமதி சிவஸ்ரீ ஹரிஹரசுத சிவாச்சாரியார் அவர்களும், ஸ்பைசி பிஸ்ஸா விங்ஸ் டொராண்டோ & லவ்லி கிரீம் ஹவுஸ் கௌரவ கலாநிதி அகிலன் முத்துகுமாரசாமி அவர்களும், கோண்டாவில் அரசாங்க வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி திரு.திருமதி வைத்தியர் திலக் ராஜ்குமார் அவர்களும்,
யாழ்ப்பாணம் தாதியர் பாடசாலையின் முன்னாள் அதிபர், கொழும்பு சுகாதார அமைச்சின் முன்னாள் பணிப்பாளர், திறந்த பல்கலைக்கழக இணைப்பாளர் செல்வி ரஜூலா வலிபுரநாதன் அவர்களும், யாழ் டில்கோ ஹோட்டலின் நிர்வாகப் பணிப்பாளர் திரு.திலக் டி திலகராஜ் அவர்களும், WATTS உணவகத்தின் MD & CEO திரு.ஸ்ரீதரன் தவராஜா அவர்களும்,
டாக்டர். துஸ்யந்தன் & திருமதி. தாமரா துஸ்யந்தன் (முதுநிலை மருத்துவமனை மேலாண்மை ஆலோசகர்) அவர்களும் முக்கிய சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்து விழாவை சிறப்பித்தனர்.

விருந்தினர்களால் மங்களக்கேற்றி இனிதே ஆரம்பமான விழாவில், அன்றைய தின கதாம்சமும் முக்கிய தருணமுமாக “முயற்சி திருவினையாக்கும் ” என்ற வள்ளுவர் கூற்றுக்கமைய தங்களின் கடின முயற்சியுடனான உழைப்பின் பிரதிபலனை பெற்றதற்கடிப்படையில் நிறுவன ஊழியர்களுக்கான விருது வழங்கும் வைபவம் வருகைதந்த அனைவரையும் நெகிழ வைத்தது.

அவ்வாறு விருதகளைப்பெறுவதற்காக
2021ஆம் ஆண்டிற்கான சிறந்த ஊழியர் – செல்வி .ருஷேகா நிஷான்

2021ஆம் ஆண்டிற்கான சிறந்த முகவர்களுக்கான விருது – திவாகர் தவவிநாயகன் ,துஷாயினி லுவினிதாஸ் மற்றும் ரஜீபன் சாந்தித்திரசேகரன்

2021 ஆம் ஆண்டிற்க்கான MOST IMPROVED முகவருக்கான விருது – ஹேமன் அன்ரனி ராஜேஸ்வரன்

2021 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த தலைமைத்துவ ஊழியருக்கான விருது – ஜெரோம் நடராஜரா

2021 ஆம் ஆண்டிற்க்கான செயல்திறன் மிக்க முகவருக்கான விருது – சர்மிளின் ரஜீவன்

2021 ஆம் ஆண்டிற்க்கான அதிக வீடு காணி விற்பனை பரிமாற்றங்கள் செய்த முகவருக்கான விருது – சர்மிளின் ரஜீவன்

2021 ஆம் ஆண்டிற்க்கான வருமானமீட்டலில் முதல் இடத்தைப்பிடித்தவருக்கான முகவருக்கான விருது – விஜேந்தன் குணரட்ணம் ஆகிய ஊழியர்கள் விருதைப் பெற்றுக் கொண்டு தங்களின் வெற்றியை விருந்தினர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொண்டனர்.

கடந்த ஆண்டுகளில் சிறந்த சேவையைப் பெற்ற வாடிக்கையாளரின் நன்றிகளோடும் வாழ்த்துக்களோடும் 5ம் ஆண்டில் கால் தடம் வைக்கும் பெருமையும் சந்தோஷமும் கொண்ட இந்நிறுவன கிளை அலுவலகமாக வத்தளை (கொழும்பில்) அமைந்துள்ள அலுவலகம் 2ம் ஆண்டில் தடம் பதிக்கும் உத்வேகமும் 3வது கிளையாக திருகோணமலையில் வரவிருக்ககும் அலுவலகத்திற்கான அடித்தளத்தையும் பதித்து நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்களால் விழாவானது சிற்ப்புற முடிவடைந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்