சாவகச்சேரியில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம்.

சாவகச்சேரி நிருபர்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய கையெழுத்துப் போராட்டம் 17/02 வியாழக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி நகரில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தில் சாவகச்சேரித் தொகுதி தமிழரசுக் கட்சிக் கிளை செயலாளர் ச.தங்கராசா கையெழுத்திட்டு போராட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இலங்கையில் இருக்கும் சட்டங்களில் மிக மோசமான கொடூரமான சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது அரசியல் பழிவாங்கல்கள், அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விரோதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் நிலை காணப்படுவதாகவும்,இப்படியான ஒரு சட்டம் நாட்டில் இருக்கக்கூடாது.நீங்கள் இடும் ஒவ்வொரு கையெழுத்தும் உங்கள் சகோதர-சகோதரியை கொடூரமான இந்தச் சட்டத்திற்கு இரையாகாமல் இருப்பதில் இருந்து பாதுகாக்கும் எனவும் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் வலியுறுத்தியிருந்தார்.மேலும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி இ.சிவமங்கை, சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.நகர வர்த்தகர்கள்,பொதுமக்கள் பலரும் ஆர்வமாக குறித்த தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.