சாய்ந்தமருதில் சுகாதாரத்துறையினருக்கு பாராட்டும், கௌரவமும் : பிரதம அதிதியாக மாகாண பணிப்பாளர் கலந்து கொண்டார்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்க ஏற்பாட்டில், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சுகாதாரதுறை அதிகாரிகள் மற்றும் வைத்தியாசாலை உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (16) வைத்தியசாலை திறந்தவெளி கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க தலைவரும், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியுமான டாக்டர். எம்.எச்.சனுஸ் காரியப்பரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.ஏ.ஆர்.எம்.தௌபீக்  கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், டாக்டர். ஐ.எல்.எம். றிபாஸ் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், சாய்ந்தமருது ஜும்மாப் பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபதுல் கரீம், சாய்ந்தமருது உலமாசபை தலைவர் எம்.எம். சலீம் (சர்கி), கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிராந்திய மருந்தாளர் திருமதி.எஸ்.இந்திரகுமார், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தர் எஸ். சுபராஜன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கணக்காளர் திருமதி. எம்.எம். உசைனா பாரிஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் உயிர் மருத்துவ பொறியியலாளர், எந்திரி ஆர். ரவிச்சந்திரன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் தர முகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர்.பி.ஜி.பி. டேனியல், கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர். எம்.பி. அப்துல் வாஜித், சாய்ந்தமருது வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிகள், உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தற்போதைய சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை முன்னர் சுற்றயல் கூறாக இருந்தபோது அதன் பொறுப்பதிகாரியாக இருந்து இவ்வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதில் முன்னின்று உழைத்த சிரேஷ்ட வைத்தியர் டக்டர் ஏ.எல். எம். ஜமீல், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் தொற்றா நோய்க் கிளினிக் சேவைகளை பொதுமக்களின் வசதி கருதி நடமாடும் சேவையாக முன்னெடுக்க பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கி இவ் வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்த சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டக்டர். யூ.எல்.எம்.நியாஸ், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக்காக உழைத்துவரும், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க தலைவரும், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியுமான டொக்டர். எம்.எச்.சனுஸ் காரியப்பர் போன்றோருடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள், பிராந்திய மருந்தாளர் திருமதி.எஸ். இந்திரகுமார்,  நிருவாக உத்தியோகத்தர் எஸ்.சுபராஜன், கணக்காளர் திருமதி.எம்.எம். உசைனா பாரிஸ், உயிர் மருத்துவ பொறியியலாளர், எந்திரி. ஆர். ரவிச்சந்திரன், தர முகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். பி.ஜி. பி.டேனியல், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம். மாஹிர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். எம்.பி.அப்துல் வாஜித் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், தற்போதைய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டொக்டர். ஜீ.சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஐ.எல்.எம்.றிபாஸ், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர்.ஏ.ஆர்.எம்.தௌபீக் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.