மிருசுவில் பகுதியில் வான் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயம்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் படை முகாம் முன்பாக ஏ9வீதியில் 17/02 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஏ9வீதி ஊடாக சென்ற மோட்டார் சைக்கிள் குறுக்கு வீதி ஒன்றினுள் திருப்ப முற்பட்ட வேளையில் பின்புறமாக வந்த ஹயஸ் வாகனம் மோதி குறித்த விபத்து சம்பவித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.