சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் ஹெரோயின்,கசிப்பு மீட்பு.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் 16/02/2022 புதன்கிழமை அதிகாலை வேளையில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கசிப்பு ஆகியன கைப்பற்றப்பட்டிருப்பதுடன்,சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ராஜ்மோகன் மற்றும் மதுவரி பரிசோதகர் ரசிகரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.சாவகச்சேரி-கல்வயல் பகுதியில் 450மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரும்,நுணாவில் பகுதியில் 730மில்லிக்கிராம் ஹெரோயினுடன் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் இருவரும் 16/02 புதன்கிழமை காலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஹெரோயினுடன் கைதான நபரை 14தினங்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன்,கசிப்புடன் கைதான நபருக்கு பிணை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் கடந்த வாரம் கல்வயல் பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் மதுவரித் திணைக்களத்தினரால் கசிப்புடன் கைதான நிலையில் அவர்களுக்கு நீதிமன்றத்தால் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்