“கல்வியூடாக மாற்றம்” : மாளிகைக்காடு, சாய்ந்தமருது பாடசாலைகளுக்கு ஆங்கில செயல்நூல் பாடப்புத்தகங்கள் வழங்கிவைப்பு.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச மாணவர்களின் ஆங்கில கல்வியை மேம்படுத்தும் நோக்கில் குரு நிறுவன பணிப்பாளரும், வ்ரவ் இளைஞர் கழக தலைவருமான அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் நிர்வாக செயலாளர் ஹிஷாம் ஏ பாவாவின் ஏற்பாட்டில் “கல்வியூடாக மாற்றம்” செயற்திட்டம் இன்று (18) இளைஞர் சேவை மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது கமு/ கமு/ அல்- ஜலால் வித்தியாலயம், கமு/ கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம், கமு/ கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயம், மாளிகைக்காடு கமு/ கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு ஆங்கில செயல்நூல் பாடப்புத்தகங்கள் மற்றும் ஆங்கில புத்தகங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இளைஞர் சேவை மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியும் இளைஞர் சேவை அதிகாரியுமான எம்.டீ.எம். ஹாரூன், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளரும், கிழக்கின் கேடயம் பொதுச்செயலாளரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல். என்.ஹுதா உமர், மாளிகைக்காடு கமு/ கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி, சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எச். சபிக்கா, இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஷமீலுள் இலாஹி, இளம் தொழிலதிபர் ஏ.எச்.எம். அஸ்பாக், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் பிரதி தவிசாளர் பீ.எம். நாஸிக், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி. அன்வர்  உட்பட பாடசாலைகளின் பிரதியதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இவேலைத்திட்டத்திற்கான செயல்நூல் பாடப்புத்தகங்களை “சமுத்ரா வெளியீட்டகத்தினர்” இலவசமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்