மட்டக்களப்பில் “தேயிலைச் சாயம்” புகைப்படக் கண்காட்சியின் 02ம் நாள்… பா.உ ஜனா விஜயம்…

(சுமன்)
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெறும் “தேயிலைச் சாயம்” புகைப்படக் கண்காட்சி 02வது நாளாகவும் இன்றைய தினம் இடம்பெற்றது.

நேற்று மற்றும் இன்றைய தினம் இடம்பெறும் மேற்படி கண்காட்சியில் பலர் வருகை தந்து பார்வையிட்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். கொவிட் -19 நிலைமைகளைக் கருத்திற் கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இக்கண்காட்சிக்கான பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் மலையகத்தின் வாழ்வாதார நிலைமைகளை எடுத்தியம்பும் விதத்தில் மேற்படி புகைப்படக் கண்காட்சியில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கண்காட்சியின் இன்றைய நாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா கலந்துகொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டதுடன், கண்காட்சி தொடர்பில் தனது கருத்தினையும் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்