சிறப்புற இடம்பெற்ற புனித யூதாததேயு முன்பள்ளிச் சிறார்களின் பிரியாவிடை நிகழ்வு

முல்லைத்தீவு – செல்வபுரம், புனித யூதாததேயு முன்பள்ளியில் பயின்று, 2022இவ்வருடம் பாடசாலைக்குச் செல்லும் சிறார்களுக்குரிய பிரியாவிடை நிகழ்வு 20.02.2022 இன்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

குறிப்பாக விருந்தினர்களது வரவேற்புடன் தொடங்கிய இந்திகழ்வில், தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல்,  சிறார்களின் கலை நிகழ்வுகள், விருந்தினர்களது உரை என்பன இடம்பெற்றதுடன், முன்பள்ளிச் சிறார்கள் பரிசில்கள் வழங்கியும் மதிப்பளிக்கப்பட்டனர்.

மேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு பங்குத்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அடிகளார், கரைதுறைப்பற்று பிரதேசசபை உபதவிசாளர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சமாதானநீதவான் ஜோசெப் ஜேசுரட்ணம், செல்வபுரம் கிராம சமுர்த்தி உத்தியோகத்தர், யோகம்மா கலைக்கூடத்தின் தலைவர் யோகேஸ்வரன், செல்வபுரம் கிராமஅபிவிருத்திச்சங்கத் தலைவர் திலீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளிச் சிறார்கள், சிறார்களின் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்