சாவகச்சேரி வைத்தியசாலையில் இவ் வருடம் இதுவரை 113 கொரோனா தொற்றாளர்கள்;3மரணங்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இவ்வருடம் இதுவரை 113கொரோனா நோயாளர்கள் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்;அவர்களில் மூவர் சிகிட்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்திருப்பதாகவும் வைத்தியசாலையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில்
தை மாதத்தில் 72தொற்றாளர்களும் ,பெப்ரவரி மாதம் இதுவரை 41தொற்றாளர்களுமாக மொத்தமாக 113 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலையின் கொரோனா சிகிட்சை விடுதியில் சிகிட்சை பெற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதே சமயம் இவ் வருடம் இதுவரை 30டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிட்சை பெற்றுள்ளனர்.பெப்ரவரி மாதம் இதுவரை 08டெங்கு நோயாளர்கள் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.