நற்பிட்டிமுனையில் என்.பி.எல். கிண்ண சுற்றுத்தொடரின் ஆரம்ப வைபவம்.

நற்பிட்டிமுனை கிரிக்கட் கழகத்தினால் (என்.சி.சி.) நடாத்தப்படுகின்ற என்.பி.எல். லீடர் வெற்றிக் கிண்ண கிரிக்கட் சுற்றுத் தொடரின் ஆரம்ப வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) மாலை நற்பிட்டிமுனை அஷ்ரஃப் விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான றஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் பிரின்ஸ் கல்லூரி முதல்வர் எம்.எம்.றியாஸ், கல்முனை உயர் நீதிமன்ற உத்தியோகத்தர் எம்.ஐ.நிரோஸ், ஆசிரியர் ஐ.எம்.றிபான் ஆசிரியர், எம்.சமீம் மௌலவி மற்றும் எச்.எம்.நிஸ்பான் உள்ளிட்டோரும் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.