அமரர் ஜீவாதரன் ஞாபகார்த்தமாக பசு மாடு அன்பளிப்பு.

சாவகச்சேரி நிருபர்
யாழ்ப்பாணம்-புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகக்கொண்ட அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்களின் 46வது பிறந்ததினம் மற்றும் 110வது நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை வறுமை நிலையில் உள்ள குடும்பத்திற்கு பசு மாடு ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
கனடாவில் வதியும் திருமதி கலைரூபி ஜீவாதரனின் நிதிப்பங்களிப்பிலேயே கிளிநொச்சி முழங்காவில் விநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த குடும்பமொன்றின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பசு மாடு ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்