மனித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்களை உருவாக்கும் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் !!

மனித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்கள் உருவாக்கம் மற்றும் தலைமைத்துவ முகாமைத்துவ பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் சி.சி.ஏ.எஸ். கெம்பஸ் தவிசாளரும், அக்கரைப்பற்று கல்வி வலய ஆங்கிலப்பாட இணைப்பாளருமான செய்னுலாப்தீன் நஜ்முதீனின் தலைமையில் (05) சம்மாந்துறை சது/சது/ அல்- அர்ஸாத் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள சம்மாந்துறை கல்விக் கோட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக எடுத்துக்கொண்ட பல்வேறு தலைப்புக்களின் கீழான பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை ஜே.ஜே பௌண்டசன் பணிப்பாளர் கலாநிதி ஐ. வை. எம். ஹனீப், அடிப்படை மனித உரிமைகள் அமைப்பின் கொழும்பு மாவட்ட தலைவரும், ஸ்டார் ஜெம்ஸ் நிறுவன முதல்வர் அஹமட் சிப்லி,  சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுகுற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.எச்.எம். ஹசீப், சது/சது/ அல்- அர்ஸாத் தேசிய பாடசாலை அதிபர்,  சி.சி.ஏ. எஸ். கெம்பஸ் பணிப்பாளர் சபையினர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கொண்டனர். இதன்போது 113 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்