சாவகச்சேரி-அரசடிச் சந்தியில் விபத்து ஒருவர் படுகாயம்.
சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி சந்திப் பகுதியில் ஏ9வீதியில் 06/03 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இவ் விபத்து சம்பவித்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 29வயதான ஜெ.பிரசாந்தன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து த் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



கருத்துக்களேதுமில்லை