கிளி தமிழரசுக்கட்சி மகளிர் அணியின் ஏற்பாட்டில் சிறப்புற இடம்பெற்ற மகளிர்தின நிகழ்வு .

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி மகளிர் அணியின் ஏற்பாட்டில், 2022ஆம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வு, 07.03.2022 இன்றையநாள் பசுமைப்பூங்காவில் சிறப்புற இடம்பெற்றது.

குறிப்பாக கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்திலிருந்து மேள, நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக விருந்தினர்கள் பசுமைப்பூங்காவிற்கு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் கட்சிக்கொடியேற்றப்பட்டதுடன், கடந்நகாலத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதனையடுத்து மங்கலவிழக்கு ஏற்ப்பட்டு ஏனைய அவை நகழ்வுகள் இடம்பெற்றன.

மேலும் இந் நிகழ்வில் இந்திய தூதரகப் பிரதிநிதி, தமிழரசுக்கட்சி தலைவர் மாவைசேனாதிராஜா, தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி சரவணபவான், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், த.குருகுலராஜா. சு.பசுபதிப்பிள்ளை, ஆகியோருடன் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சிமாவட்ட மகளிர் அணியினர், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.