தென்மராட்சியில் கிராமம் தோறும் தடுப்பூசி முகாம்.- சுகாதாரப் பிரிவு நடவடிக்கை.

சாவகச்சேரி நிருபர்
தென்மராட்சியில் இந்த வாரம் தொடக்கம் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக தடுப்பூசி முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக சாவகச்சேரி சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் தடுப்பூசி செலுத்தாதோர் பொது இடங்களில் நடமாட முடியாது என்ற அரசாங்கத்தின் அறிவித்தலை அடுத்து சாவகச்சேரி சுகாதார பிரிவு கிராமம் தோறும் தடுப்பூசி முகாம் அமைத்து பொதுமக்களுக்கு  தடுப்பூசி செலுத்தவுள்ளது.
தென்மராட்சிப் பகுதியில் இதுவரை 22சதவீதமானோர் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் டோஸினை பெற்றுள்ள நிலையில் ஏனைய பொதுமக்களும் கிராம் தோறும் தடுப்பூசி என்ற செயற்திட்டம் ஊடாக கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.தென்மராட்சிப் பிரதேசத்தில் இவ்வருடம் இதுவரை 4கொரோனா மரணங்கள் பதிவாகியிருப்பதாகவும் மேலும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.