ஆரையம்பதியில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் – 2022

ஆரையம்பதியில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் – 2022
மார்ச் 08ஆந் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு அதன் முதலாவது நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஆரையம்பதி சிறுவர் பூங்காவிற்கு அருகில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின்  தலைமையில் (06) திகதி பி.ப.03.30 மணிக்கு ஆரம்பமானதுடன்  இதில் குடும்ப வன்முறை தொடர்பான வீதியோர நாடகம் சூரியா கலாச்சார குழுவினரால் அளிக்கை செய்யப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் உதவி பிரதேசசெயலாளர் திருமதி.வி. லோகினி, கிராமசேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , ஆரையம்பதி கிழக்கு மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதன்போது  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்