கல்முனை மஹ்மூத் கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி உத்தியோகபூர்வமாக மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தேசத்தைக் கட்டியெழுப்பும்  “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைக்கு அமைவாக இலங்கைக் கல்வியின் உண்மையான சுதந்திரத்திற்காக தேசிய பாடசாலைகள் எண்ணிக்கையை 1000 வரையில் அதிகரிக்கும் தேசிய நிகழ்வும், சர்வதேச மகளிர் தினமும் – 2022 நிகழ்வின் ஒரு அங்கமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியை தேசிய பாடசாலையாக மாணவிகளுக்கு உரித்தாக்கும் நிகழ்வு சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் பாடசாலை அதிபர் யூ. எல்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாடு முழுவதும் நடைபெற்றுவரும் இந்நிகழ்வின் ஒரு அங்கமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மேலும் கல்வி வெளியீட்டு திணைக்கள மேலதிக ஆணையாளர் நாயகம் இசட். தாஜுதீன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டவலியு. ஜீ. திஸ்ஸநாயக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரி வீ. எம். ஸம்ஸம், முன்னாள் அதிபரும், சாய்ந்தமருது கலாச்சார அதிகார சபை பிரதித்தலைவருமான ஏ. எச்.அப்துல் வஸீர், கல்முனை வலய பாடசாலைகளின் அதிபர்கள், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதி அதிபர் ஆர்.எம். அஸ்மி காரியப்பர்,  நிர்வாகம், மாணவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.