கிளிநொச்சி நகர திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி நகர திட்டமிடலும் கிளிநொச்சி நகர வடிவமைப்பில் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சி பிரதேச சபையின் வளாகத்தில் கலந்துரையாடல் நேற்றைய தினம்(12.03.2022) இடம்பெற்றது.
கிளிநொச்சி நகர வடிவமைப்பில் விடுதலைப் புலிகளின் தூர நோக்குடனான திட்டமிடல் தொடர்பிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் தி. இராசநாயகம் அவர்களின் பங்களிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா மூத்த நிர்வாக சேவை அதிகாரியும், பொருளாதார, சமூக ஆய்வாளருமான ம.செல்வின், திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் கிளி பீப்பிள் அமைப்பின் ஸ்தாபகர்த் தலைவர் வைத்தியர் சதானந்தன் வைத்தியர்கள் பொறியியலாளர் கடம்பசோதி முன்னாள் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்கள் புலம்பெயர் உறவுகள் துறை சார் நிபுணத்துவம் பெற்றவர்கள் வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் பொது அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.