சோஷலிச மகளிர் சங்கத்தின் பெண்கள் தின விழா…

சாவகச்சேரி நிருபர்
சோஷலிச மகளிர் சங்கத்தின் (ஜே.வி.பி) பெண்கள் தின நிகழ்வுகள் 13/03/2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தென்மராட்சி- எழுதுமட்டுவாழ் வடக்கு முன்பள்ளி மண்டபத்தில் “இருண்ட பொருளாதாரத்திற்கு ஒளியைத் தேடும் பெண்களின் கடமை” எனும் கருப்பொருளில் இடம்பெற்றது.
சோஷலிச மகளிர் சங்கத்தின் தென்மராட்சி அமைப்பாளர் தோழி அருட்சோதி சிவயோகவதி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விருந்தினர்களாக
சோஷலிச மகளிர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தோழி சமன்மலி குணசிங்க மற்றும் சோஷலிச மகளிர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தோழி சரோஜா போல்ராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இ.சந்திரசேகரன்,வல்லமைப் பயணி என அழைக்கப்படும் பெண் விடுதலை செயற்பாட்டாளர் ரஜனி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பெண் விடுதலை தொடர்பான கருத்தமர்வுகள், கலாசார நிகழ்வுகள் மற்றும் சிறுவர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வுகள் ஆகியன இடம்பெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்