சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் மகா வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் சித்தி

(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டத்தின் அதிகஸ்டப் பாடசாலையான சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் மகா வித்தியாலயத்தில் வெளியான புலமை பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் அருட்சகோதரி எம்.சிறியபுஸ்பம் தெரிவித்தார்.
குகதீஸ் பிரித்திக்கா168, அந்தோனி றெகான் 163, சகாயம் சந்துஸ் 162, அருளம்பலம் டினோசன் 153, ரஞ்சித் சஞ்சை 152, எல்மோ தியாகராஜா ஜெயறியான்சன் 147, நிக்சன் காசினி 147 ஆகிய ஏழு மாணவர்களும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இம்முறை பாடசாலையில் 32 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 07 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்றதுடன்,  கடந்த வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் சித்திபெற்று மூன்றாவது தடவையாகவும் சித்தியடைந்தோர் எண்ணிக்கை 100வீதமாக  பாடசாலை தக்க வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாடசாலைக்கும், சமூகத்திற்கு நற்பெயரை ஈட்டிய மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன்,  இம்மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற அயராது பாடுபட்ட ஆசிரியர் எஸ்.லோகேஸ்வரன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பயணித்த ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்விசாரா ஊழியர்களும் பாடசாலை அதிபர் நன்றிகளை தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்