அக்கரைப்பற்று கலாசார அதிகார சபையின் நிர்வாக தெரிவுக்கூட்டம்

அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் 2022 நடப்பு ஆண்டிற்கான கலாசார அதிகார சபையின் புதிய நிர்வாக தெரிவு கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எல்.றிஸ்வான் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ .எம்.எம். அன்சார் பிரதம அதீதியாக கலந்து கொண்டு நடப்பு ஆண்டிற்கான நிர்வாகத்தை தெரிவு செய்தார். அதனடிப்படையில் பதவி வழி தலைவராக ஐ.எல். றிஸ்வான், செயலாளராக அரச சுகாதார முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு.ஏ.பி.நூறுல்லாஹ், பொருளாளராக ஊடகவியலாளர் ஏ.ஜி.ஏ. கபூர், பிரதி தலைவராக எம்.ஏ.நஜிமுடின், உப செயலாளராக எழுகவி ஜெலீல் மற்றும் மேலும் 06 உறுப்பினர்கள் அடங்களாக மொத்தம்11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்