தேசிய காங்கிரஸின் ஆதரவு தளமான அக்கரைப்பற்றில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் !

நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில்  அக்கறைபற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அக்கரைப்பற்று பிரதான வீதி பட்டினப்பள்ளிக்கு அருகில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு GO HOME GOTA, வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை, கோட்டா சேர் தயவு செய்து போங்க சேர், வெந்தது நாடு கோட்டாவ தூக்கி வெளியில் போடு, பொருளாதார நெருக்கடி இரவெல்லாம் கொசுக்கடி போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அரசுக்கு ஆதரவளிக்கும் அரசின் பங்காளி கட்சிகளில் முஸ்லிம் கட்சியாக இருக்கும் ஒரே கட்சியான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் ஊரான அக்கரைப்பற்றிலும் போராட்டம் அதிகரித்திருப்பதன் மூலம் நிரந்தரமாக அரசின் பங்காளி அந்தஸ்திலிருந்து தேசிய காங்கிரஸ் விலகவேண்டிய நேரம் வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.