சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் ஓவியப் பயிற்சிப்பட்டறை

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்
ஓவியப் பயிற்சிப்பட்டறை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசாரப்பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை இணைந்து நடாத்திய “தொலஸ்மகே பஹன” – 2022 வேலைத்திட்டத்தின் “ஓவியப் பயிற்சிப்பட்டறை”
சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (05) இடம்பெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபீகாவின் ஒருங்கிணைப்பில், பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆசிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்ஸான், கலாசார உத்தியோகத்தர் சுரேஷ் குமார் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததோடு, ஏ.ஆர்.எம். ஹாதி நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்