பலத்த கோஷத்துடன் சாய்ந்தமருது, கல்முனையில் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் !

(நூருல் ஹுதா உமர்)

நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் இரண்டாவது நாளாக புதன்கிழமை இரவும் தேசிய கொடியை கையில் ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பிரதான வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு GO HOME GOTA, வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, பச்சிளம் குழந்தைகளை கொன்ற கோத்தாவே வெளியேறு, மொட்டின் முட்டுக்கள் களருங்கள், அடுத்து நாட்டை விட்டு வெளியேர போவது யார், ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை, கோட்டா சேர் தயவு செய்து போங்க சேர், வெந்தது நாடு கோட்டாவ தூக்கி வெளியில் போடு, பொருளாதார நெருக்கடி இரவெல்லாம் கொசுக்கடி, பசிலே வெளியேறு போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சாய்ந்தமருதில், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இருந்து ஆரம்பித்து மாளிகா சந்திவரை சென்ற ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றதுடன் கல்முனையில் நாகூர் ஆண்டகை தர்கா சரிபிலிருந்து ஆரம்பித்த போராட்ட பேரணி கல்முனை பிரதான வீதிகளிலும் இடம்பெற்றது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை கட்டுப்படுத்தும் வேலைகளை பொலிஸார் துரிதகெதியில் மேற்கொண்டிருந்ததுடன் உச்சகட்ட பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டிருந்தமையையும் காண முடிந்தது.


UMAR LEBBE NOORUL HUTHA UMAR 

BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.