தென்மராட்சியில் நகர அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் மயப்படுத்தி வைக்கப்பட்டன.

சாவகச்சேரி நிருபர்
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி,கொடிகாமம் மற்றும் நாவற்குழி நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட நகர அழகுபடுத்தல் திட்டங்கள் 02/04/2022 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் மற்றும் சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் இ.சிவமங்கை ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டு பல்பரிமாண நகரங்களைத் திறந்து வைத்துள்ளார்.மேலும் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,வடமாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் திஸாநாயக்க, தென்மராட்சி பிரதேச செயலர் உஷா சுபலிங்கம், சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள்,நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பல்பரிமாண நகர அழகுபடுத்தல் திட்டத்தில் நாடளாவிய ரீதியாக 120நகரங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜனின் முன்மொழிவில் தலா 20மில்லியன் ஒதுக்கீட்டில் மருதனார்மடம், கொடிகாமம்,சாவகச்சேரி,நாவற்குழி மற்றும் வேலணை ஆகிய நகரங்கள் அழகுபடுத்தப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.