225 பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வது தீர்வாகாது -எஸ்.எம்.மரிக்கார்

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு 225 பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதல்ல மாறாக தேசிய கொள்கையை உருவாக்குவதற்கான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதே என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இலங்கையின் 74 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல முக்கிய செயற்திட்டங்கள் அமைப்புக்குள் குறைபாடுகள் இருந்தபோதிலும் ஆரம்பிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் மக்களின் கருத்துக்களை திசை திருப்பும் அரசியல் தந்திரோபாயங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் பாரிய பொருளாதார அபிவிருத்திக்கு வழிவகுத்த கல் ஓயா மற்றும் ஜனசவிய போன்ற அரச அனுசரணை திட்டங்கள், சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவுதல் மற்றும் ஆடை தொழிற்சாலைகளை அமைத்தல் போன்றவற்றை அவர் நினைவுகூர்ந்தார்.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு உள்ளிட்ட கடந்த அரசாங்கங்களால் நிறைவேற்றப்பட்ட நல்ல விடயங்களை மக்கள் மறந்துவிட வேண்டாம் என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.