அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: 18 உறுப்பினர்கள் கையொப்பம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி நேற்று சபையில் அறிவித்திருந்தது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேராவும், முஜிபுர் ரஹ்மானும் இதனை உறுதிப்படுத்தினர். அத்தோடு அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக, திஸ்ஸ அத்தநாயக்க, ராஜித சேனாரத்ன, ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ.ஹலீம், ஹர்ஷ டி சில்வா என 18 உறுப்பினர்கள் இதுவரை கையொப்பமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.