காலி முகத்திடலில் திரண்ட மக்கள் பாரிய போராட்டம்- கலகமடக்கும் காவல்துறை மற்றும் அதிரடிப்படையினர் குவிப்பு!
கொழும்பு – காலி முகத்திடல் மைதானத்தில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனய காவல்துறை பிரிவுகளில் இருந்து விசேட காவல்துறை குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுபற்றி காவல்துறை தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
போராட்டக்காரர்கள் கலவரமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது.
கருத்துக்களேதுமில்லை