இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்கான கடவுச்சீட்டு தயாரிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது போன்ற இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 40% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிநாடு செல்வதற்காக சொத்துக்களை விற்று பணம் திரட்டி வருவதால்,அண்மைக் காலமாக நாடு முழுவதும் வீடுகள் மற்றும் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதேவேளை சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்லும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.