மகிந்தவிற்கு எதிராக பங்காளி கட்சிகள் போர்க்கொடி -கோட்டாபயவிற்கு சென்றது கடிதம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்து புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு கோரி அரசின் 11 பங்காளி கட்சிகளும் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயாதீன குழுவினரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் யோசனையும் அந்த கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேச்சைக் குழுவாக நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ள 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அநுர பிரியதர்ஷன யாப்பா, அரச தலைவர் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

நெருக்கடிக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சி தேசிய செயற்குழுவை நியமிப்பதும், நாடாளுமன்ற உடன்படிக்கையின் மூலம் புதிய பிரதமர் மற்றும் அனைத்துக் கட்சி அமைச்சரவையை நியமிப்பதும் முன்மொழியப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்துவதற்கு பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து அரச தலைவர் செயற்பட வேண்டும் எனவும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

அமைச்சுக்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க நிபுணர்கள் குழுவொன்றை நியமித்து அதற்கேற்ப அனைத்துக் கட்சி அமைச்சரவையை நியமிக்குமாறும் அந்தக் கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், நெருக்கடிக்கு குறுகிய கால மற்றும் நடுத்தர கால தீர்வையும் கடிததத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.