நிதியமைச்சர் எந்த அடிப்படையில் அடுத்த ஆறுமாதங்களிற்குள் வரிகளையும் எரிபொருள் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்….

நிதியமைச்சர் எந்த அடிப்படையில் அடுத்த ஆறுமாதங்களிற்குள் வரிகளையும் எரிபொருள் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார் – தொழிற்சங்க தலைவர் கேள்வி நிதியமைச்சர் எந்த அடிப்படையில் அடுத்த ஆறுமாதங்களிற்குள் வரிகளையும் எரிபொருள் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார் என ஐக்கியவர்த்தக சங்ககூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்தபாலித கேள்வி எழுப்பியுள்ளார். எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தி;ற்கு பொதுமக்கள் ஆணைவழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசநிதி எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கா அடுத்த ஆறு மாதங்களிற்குள் வரிகள் அதிகரிக்கப்படும் எரிபொருள் விலை அதிகரிக்கும் நட்டத்தில் இயங்கும் அரச ஸ்தாபனங்கள் மறுசீரமைக்கப்படும் என நிதியமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார். ஏன் நிதியமைச்சர் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க முயல்கின்றார் என கேள்வி எழுப்பியுள்ள ஆனந்தபாலித சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவது வேறு எரிபொருள் விலைகளை அதிகரிப்பது வேறு என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் பல மாதங்களிற்கு முன்னரே சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியிருக்கவேண்டும் அதன் தவறான முடிவுகளால் வறிய மக்கள் துயரில் சிக்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது மேலும் சுமைகளை செலுத்துவதற்கு பதில் மக்களின் குரல்களிற்கு செவிமடுத்து அரசாங்கம் பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்