ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மக்களின் போராட்டங்கள்…..

ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மக்களின் போராட்டங்கள் எரிபொருள் மருந்து எரிவாயு பற்றாக்குறை பிரச்சினைகளை மறக்கச்செய்துள்ளது- சதொசவில் பொருட்கள் இல்லாத நிலை – அசேல சம்பத்
அரசியல்போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் உண்மையான பிரச்சினைகளை மறக்கின்றனர் என மக்கள் உரிமை பாதுகாப்பு மன்றத்தின் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மக்களின் போராட்டங்கள் எரிபொருள் மருந்து எரிவாயு பற்றாக்குறை பிரச்சினைகளை மறக்கச்செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சதொசவில் ஏற்கனவே பொருட்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது அரசாங்கம் கண்மூடித்தனமாக பொருளாதாரத்தை கையாண்டதால் பொதுமக்கள் அதிகரித்துள்ள பணவீக்கத்தின் சுமைகளை சுமக்கவேண்டியுள்ளது என அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக செல்லும்போதே நாட்டின் தலைவர்கள் தங்கள் மீது செலுத்திய சுமை மக்களிற்கு தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் சதொசவில் உள்ள பொருட்களை தனியாருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர் டீசல் இல்லாததால் காய்கறிகள் அழுகும் நிலையேற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.