ஏப்ரல் 11 – 17 ஆம் திகதி வரை மின்வெட்டு நேர விபரம்!!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடுத்த வாரத்திற்கான மின்வெட்டு அட்டவணையை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு ஏப்ரல் புத்தாண்டு பண்டிகையான 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதையடுத்து ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்