எரிபொருள் நிரப்பச் வென்றவர் திடீர் மரணம்

வென்னப்புவை- தம்பரவில பகுதியில் எரிபொருள் நிலையத்திற்கு அருகில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது.

இன்று காலை 7.30 அளவில் குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

கொச்சிக்கடை – போருதொட்ட பகுதியில் வசித்து வந்த மொஹமட் ஜெஸ்மின் என்ற நபரே இவ்வாறு மரணித்துள்ளார்.

காருக்கு எரிபொருளை நிரப்ப அவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வந்துள்ளதுடன், எரிபொருளை நிரப்பிய பின்னர் சில அடி தூரம் கார் சென்றுள்ளதுடன், கார் திடீரென நின்றுள்ளது.

அப்போது அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, எரிபொருளை நிரப்பிய கார் சாரதி ஆசனத்தில் இருந்தபடி இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியர்கள் சம்பவம் பற்றி வென்னப்புவை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வென்னப்புவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்