திவால் நிலைக்குள் இலங்கை – நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்….

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு 03 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உதவி கிடைக்கப்பெறும் பட்சத்திலேயே எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இம்மாதம் பேச்சுவார்த்தைக்கு நாடு தயாராகி வருவதாகவும் அதற்கு முன்னதாக 3 பில்லியன் டொலர் நிதிக்கான தேவை காணப்படுவதாகவும் நிதி அமைச்சர் அலி ஷப்ரி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்க முடியும் ன நம்பிக்கை வெளியிட்டுள்ள அரசாங்கம், தவணைக் கொடுப்பனவுகளை காலம் தாழ்த்தி செலுத்துவதற்கான சட்ட உரிமையை கோரவும் எதிர்பார்த்துள்ளது.

ஜுலை மாதமளவில் செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் டொலர் கடனை செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுக்கள் தொடர்பிலும் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.