ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்……

ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2 ஆண்டு காலமாக எந்த வித இடமாற்றங்களையும் நடைமுறைப்படுத்தாத நிலையிலே குறித்த தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளது.

ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதோடு கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த காலங்களில் அந்த செயற்பாடு பாதிப்படைந்திருந்தது.

இந்த நிலைமை நீடிக்காது இருக்க இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்க இணைய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் குறித்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஆசிரியர் இடமாற்றம் தாமதடைந்துள்ளதோடு, எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உடனடியாக அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆசிரிய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.