திறமையற்ற கோத்தபாய அரசாங்கம் இலங்கையை பொருளாதார அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது – ரணில்!!!

திறமையற்ற கோத்தபாய அரசாங்கம் இலங்கையை பொருளாதார அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என குற்றம்சாட்டியுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் முழுமையான தோல்வி மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் அரசாங்கத்தின் காலத்தில் பொருளாதார நெருக்கடி ஒருபோதும் ஏற்படவில்லை எங்கள் அரசாங்கத்தின் காலத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசைகளில் நிற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வீதியில் இறங்குவதற்கு ஏதாவது காரணமிருக்கவேண்டும் நாட்டின் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் திறமையின்மை காரணமாகவே இவை அனைத்தும் இடம்பெறுகின்றன என ரணில்விக்கிரமசிங்க ஏஎன்ஐக்கு தெரிவித்துள்ளார்.
நான் பிரதமராகயிருந்தவேளை நாட்டின் பொருளாதாரம் திறமையான நிலையிலிருந்தது இந்த அரசாங்கத்தின் திறமையின்மை மக்களை வீதிக்கு கொண்டுவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை முன்கூட்டியே பெறாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் உரிய தருணத்தில் நடவடிக்கைகளை எடுக்காதமைக்காக தற்போதைய அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தை நாடினால் கூட பயனளிக்ககூடிய நிவாரணம் கிடைப்பதற்கு நீண்டகாலம் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கைக்கு தன்னால் முடிந்தளவிற்கு உதவிவழங்கியுள்ளது.இந்தியா நிதிதொடர்பற்ற விதத்தில் உதவிகளை வழங்கும் அதேவேளை இந்தியாவின் ஆதரவின் விளைவுகள் எவ்வாறு உள்ளன என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் கீழ் நாட்டிற்கு சீனாவிடமிருந்து முதலீடுகள் எதுவும் கிடைக்கவில்லை என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது தற்போது இடம்பெறுவது நாட்டிற்கு பேரழிவு என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டுவருடங்களாக நாடு பொருளாதார விடயங்களை அலட்சியம் செய்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் ஆட்சி முடிவிற்குவந்தவேளை கடன்களை செலுத்துவதற்கு பணமிருந்தது எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது நாட்டில் அரசாங்கம் இல்லை ,என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் கடந்த இரண்டு வாரங்களில் அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாட தீர்மானித்துள்ளது,ஆனால் இது நீண்டகாலம் நீடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னர் நாங்கள் வளங்கள் அற்ற நிலைக்கு தள்ளப்படுவோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கையிருப்பில் போதியளவு நிதியிருப்பதாக தெரியவில்லை,தற்போது அரசாங்கம் கட்டணங்களை செலுத்துவதற்காக முன்னணி ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து பணத்தை பெறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் எரிபொருள் கொள்வனவிற்கான இந்தியாவின் கடன் முடிவிற்குவரும் அதன் பின்னர் நாங்கள் மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்கொள்ளப்போகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்…..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.