226 பேர் 21 மில்லியன் மக்களின் நாட்டை அழித்துவிட்டனர்- குமார் சங்கக்கார!!!
வெறுமனே 226 பேர் 21மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர் என குமார் சங்கக்காரர் தெரிவித்துள்ளார்.
மக்களை இவ்வாறாள உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டுவந்தது குறித்து தலைவர்கள் வேதனைப்படவில்லை வருந்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு மக்களிற்கு அவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு உடனடி தீர்வு அவசியம் என தெரிவித்துள்ள குமார் சங்கக்கார நெருக்கடியான தருணங்களில் மாத்திரம் ஐக்கியப்படாத- மாறாக நெருக்கடியிலிருந்து பாடங்களை கற்று இனமத பேதங்கள் காணப்படாத நாட்டை உருவாக்குவது குறித்தே எதிர்பார்ப்பை கொண்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் முதுகில் ஊழலுக்கும் குடு;ம்ப வம்சங்களை கட்டியெழுப்புவதற்கும் இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை