ஆர்ப்பாட்டத்தில் பாடிக் கொண்டிருந்த நபர் மாரடைப்பால் மரணம்

கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நபர் ஒருவர் நேற்று (11) இரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஷிராஸ் (Shiraz Rudebwoy) எனும் ரெப் (Rap) பாடகரான குறித்த நபர் இச்சம்பவத்திற்கு சற்று முன்னர் பாடலொன்றை பாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

காலிமுகத்திடலுக்கு அருகில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் 4ஆவது நாளாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்