புத்தாண்டின் பின்னரேயே புதிய அமைச்சரவை பதவியேற்பு
அரசியல் வட்டாரங்கள் நேற்று தெரிவிப்பு
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நேற்று அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்ய இருந்த போதும் கடைசி நேரத்தில் பின்போடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. புதிய அமைச்சரவைக்கான நியமனங்கள் தொடர்பில் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள இந்து புத்தாண்டுக்குப் பின்னர் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இடம்பெறும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து பிரதமர் தவிர்ந்த அமைச்சரவை அண்மையில் ராஜினாமா செய்தது. பின்னர் 4 அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டார்கள்.
புதிய அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்க இருந்த நிலையில் அது பின்போடப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
கருத்துக்களேதுமில்லை