ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்-

நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அம்பாறை மாவட்டம் கல்முனைத்தொகுதிக்கான  அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக்கின் தலைமையில் திங்கட்கிழமை(11) இரவு பல்வேறு கோஷங்களுடன் மாளிகைக்காடு சந்தியில் இருந்து பெரியநீலாவணை வரை கால்நடையாக  போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கல்முனை- அக்கரைப்பற்று  பிரதான வீதிவழியாக சென்ற இப்போராட்டத்தில்   இளைஞர்கள் வயோதிபர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு    கோத்தா நாட்டை விட்டு வெளியேரு,   குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக , பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை  , பசிலே வெளியேறு  ,அரசே வீட்ட போ,  போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு பேரணியாக சென்றனர்.

இவ் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை சாய்ந்தமருது ,கல்முனை ,பெரியநீலாவணை , பொலிஸார் துரிதகெதியில் மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டிருந்தமையையும் காண முடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.