பிரதமர் தனது உரையில் வடக்குக்கும் தெற்கிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்; சபா குகதாஸ்!!!

பிரதமர் மகிந்த ராஐபக்ச 11 திகதி ஆற்றிய விசேட உரையில் பிரதானமாக குறிப்பிட்ட விடையம் தெற்கில் வீதியில் இறங்கி ஐனாதிபதியை வீடு செல்லுமாறு போராடும் தென்னிலங்கை இளையோரை நோக்கி நீங்கள் உங்கள் வயது வந்தவர்களிடம் 1988 ,1989 ஆண்டுகளில் நடந்த படுகொலை பற்றி கேட்டறியுங்கள் என்றும் அதேபோல வடக்கு இளையோரும் 30 ஆண்டுகள் நடந்த போரை எப்படி நாம் முடிவுக்கு கொண்டு வந்தோம் என்ற வரலாற்றை பெரியவர்களிடம் கேட்டறியுங்கள் என வடக்குத் தெற்கு மக்களுக்கு குறிப்பாக தற்போது அரசாங்கத்திற்கு எதிராக போராடும் தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் போராடும் தரப்புக்களால் நாடு மீண்டும் இருண்ட யுகத்துக்குள் செல்லவுள்ளதாகவும் கூறினார். இதில் வேடிக்கை என்னவென்றால் நாட்டை இருண்ட யுகத்துக்குள் ராஐபக்ச குடும்பம் தான் கொண்டு சென்றார்கள் அவர்கள் அனைவரும் வீடு செல்ல வேண்டும் என தென்னிலங்கையில் போராட்டக்காரர் கோசமிடுகிறார்கள்.
பிரதமரின் உரையில் நாட்டின் விவசாயிகளை மீண்டும் ஏமாற்றுவதாக இராசயன உர இறக்குமதி அதற்கான மானியம் வழங்குதல் போன்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. டொலர் இல்லாது எப்படி உரம் இறக்குமதி சாத்தியம் என்ற கேள்விக்கு அப்பால் இதற்கு முன்னரும் விவசாயிகளின் போராட்டத்தை நசுக்க தனியார் உர இறக்குமதி செய்யலாம் என அரசாங்கம் அறிவித்தது ஆனால் டொலர் இல்லாமையால் வெறும் அறிவிப்பாகவே இன்றுவரை இருக்கின்றது.
ராஐபக்ச அரசாங்கத்தின் இயலாமை மீண்டும் பிரதமரின் விசேட உரையில் வெளிப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.