தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அமைச்சுப்பதவியை ஏற்கமாட்டோம்! – கூட்டமைப்பு

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசாங்கம் தானாகவே முன்வந்து இரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்தவிடம் நேரில் முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடியால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மீள்வதற்கான மாற்றுவழிகள் மற்றும் யோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்குவோம்.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை, நிறைவேற்று அதிகார முறைமையை இல்லது ஒழிப்பது மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்ற பிரேரணை குறித்து தமித் தேசிய கூட்டமைப்பு கூடி கலந்துரையாடி முடிவு செய்யும்.
தன்னுடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிக்கா அம்மையாரும் கலந்துரையாடியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.