சுபகிருது வருடம் நாட்டு மக்களுக்கு சுபம் அளிக்க வேண்டும்-அங்கஜன் இராமநாதன்.

பிறக்கின்ற சுபகிருது வருடம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுபம் கொடுக்கும் நல் ஆண்டாக அமைய வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்-சிங்கள புதுவருட தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்;
நாட்டு மக்களுக்கு தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்.
நாடும்-நாட்டு மக்களும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்திருக்கும் இக்கட்டான தருணத்தில் இப் புதுவருடம் பிறந்துள்ளது.
பிறந்துள்ள சுபகிருது வருடம் சவால்களை வெற்றிகொண்டு நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மீண்டெழுந்தது போல் நிச்சயமாக தற்போது நிலைகொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் இருந்தும் நாடும்-நாட்டு மக்களும் விடுபடுவோம்.அந்த வளமான நாளின் தொடக்க நாளாக இந் நாள் அமைய வாழ்த்துகிறேன்.என மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்