புலமைப்பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு .

சாவகச்சேரி நிருபர்
யா/போக்கட்டி அ.த.க பாடசாலையின் 2021 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் தி.அபராஜிதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக தென்மராட்சிக் கல்வி வலய கல்வி நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ந.காண்டீபனும்  ,சிறப்பு விருந்தினராக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் க.சிவகுமாரும், கௌரவ விருந்தினர்களாக வவுனியா குற்றவியல் ஆய்வுகூட பொறுப்பதிகாரி ப.இன்டிக்காம், கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர் அ.சத்தியானந்தன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி வதனி, லண்டனைச் சேர்ந்த திருமதி குகராணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்