ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த மகிந்த!…

காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வரும் இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்வதற்காக இளைஞர், யுவதிகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் கடந்த 5 நாட்களாக இளைஞர், யுவதிகளினால் இரவு பகல் பாராது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை,  நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்