நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற நபர் கைது !!!!!!

ஹொரணை பிரதேசத்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (13) காலை மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹிக்கடுவ, வெல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காலியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபர் ஹொரணை வைத்தியசாலை வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்